Saturday, November 16, 2013

7. பணம்

எப்படி சம்பாதிப்பது என்ற முடிவை நாம் எடுக்கின்றோம். எப்படி செலவழிப்பது என்ற முடிவை அடுத்தவரை பார்த்து எடுக்கின்றோம். பணம், பேராசையை தேவையாக்கும் கருவி.




படம்: www.devianteles.deviantart.com/art/Greed-is-stopping-human-evolut-252546322

Wednesday, October 16, 2013

6. உண்மை

காந்தி என்றார்கள், காமராஜர் என்றார்கள், அண்ணா என்றார்கள்.

பின்பு எம்.ஜி.ஆர் என்றார்கள், கலைஞர் என்றார்கள், அம்மா என்றார்கள். 

இன்று மோடி என்கிறார்கள்.

யார் வேண்டுமானாலும் வாங்க போங்க. எனக்கு மட்டும் ஒரே இடம், ஒரே தொழில், ஒரே வேலை சோறு.

Saturday, January 5, 2013

5. கல்வி

கற்பது என்னவென்றோ, கற்பது எதற்காக என்றோ தெரியாமலே சென்று கொண்டு இருக்கின்றோம். உண்மை கல்வியை கொன்று கொண்டு இருக்கின்றோம்.

கற்பது என்ன?
புத்தகங்களையோ  அல்லது அதில் உள்ள பக்கங்களையோ   அல்லது அதில் உள்ள எழுத்துக்களையோ அல்ல. அதில் உள்ள அர்த்தங்களை.

கற்பது எதற்க்காக? 
கற்ற  அர்த்தங்கள் நாம் வாழும் சமுதாயத்திற்கு எப்படி பயன்படும் என்பதை யோசிப்பதற்கு. யோசித்ததை செய்வதற்கு. பணம் சம்பாதித்து பிணம் ஆவதற்கு அல்ல.