Wednesday, April 2, 2014

8. இயலாமை

சாலையில் இருக்கும் குழியின் மீது வாகனம் இறங்கும்போதும்;
பிளாஸ்டிக் கூடாரங்களுக்குள் வசிக்கும் சாலை ஓர கடைசி மனிதனை பார்க்கும்போதும்;

பெற்ற குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வசதியின்றி தவிக்கும் தந்தையின் அழுகையை கேட்கும்போதும்;
கல்வி என்ற பெயரில் பல லட்சங்களை செலவு செய்த பிறகும், வாழ்வில் செய்வதரியாது தவிக்கும் இளைஞர்களுடன் உரையாடும்போதும்;

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
எதுவும் செய்ய முடியவில்லை. அருகதை இல்லை. துணிவு இல்லை. முயற்சி இல்லை.

சரி..வரும் தேர்தலில் வாக்காவது அளிப்போம் என்று மதுரைக்கு ரயில் முன்பதவி செய்திருக்கின்றேன்.

No comments:

Post a Comment