Tuesday, December 11, 2012

4. விபத்து

பிறந்துவிட்டோம், இனி இறப்பது உறுதி. இறப்பது எப்போது என்பது மட்டும் முக்கியமல்ல , எப்படி என்பதும் முக்கியம்.

பேருந்தின் படியில் தொங்கும் பொழுது, டிராபிக் சிக்னலில் தாவும் பொழுது, மது அருந்தி தன்னை தானே மறக்கும் பொழுது, புகை புடித்து புத்தி இழக்கும் பொழுது, நோய்க்கான வைத்தியம் சரிவர பார்க்காத பொழுது...

தன்னை தானே கொன்று கொள்ள தினமும் துணிகிறோம். இதில் அரசுக்கும் பங்கு உள்ளது என்று கூறுவது எவ்வளவு உண்மையோ தெரியவில்லை.

3. பசி

மண் பானையில் இருந்து  இறக்கி தோல் பானையில் போட வேண்டும். அதுவே உணவு என்று எனக்கு தெரிந்த பாட்டி ஒருவர் கூறினார்.

இன்று மண் பானை உடைந்து தோல் பானை சுருங்கி வாழும் இந்தியர்கள்  நிலைமை நெஞ்சுருக வைக்கிறது. 

நடை பாதையில் குடியேறி,  பிடி அரிசியில் சோறு சமைத்து, மழைக்கு ஒதுங்க ஓடு இன்றி, தினம் செத்துப்பிழைக்கும் வறுமை கோட்டுக்குக்கீழ் அகல பாதாளத்தில் இருக்கும் கடைசி இந்தியனின் இன்றைய நிலைமை; தனி மனித இயலாமையா அல்லது சமூகத்தின் இயலாமையா?

2. மின்சாரம்


"வீட்டில் இருக்கும் வரை இரு மாதங்களுக்கு ஒருமுறை பணம் கட்ட வேண்டிய நஷ்ட கணக்கில் இருந்தாய்.


இன்று நீன் என் வீட்டிற்கு வருவதே இல்லை, உன் வரவை தேடி நான் மட்டும் அல்ல, வாங்கி வைத்த இன்வெர்ட்டர்  மற்றும் பாட்டரி கூட காத்து இருக்கிறது."


எல்லாம் வேண்டும் என்று சொல்வதற்கு நாம் மிகவும் வளர்ந்த தேசம் அல்ல. ஆனால் அவசியம் வேண்டும் என்ற பட்டியலில் மின்சாரமும் ஒன்று. அரசே..தாங்கள் ஏன் இதை திட்டமிட மறந்தீர்கள்?