சாலையில்
இருக்கும் குழியின் மீது வாகனம் இறங்கும்போதும்;
பிளாஸ்டிக்
கூடாரங்களுக்குள் வசிக்கும் சாலை ஓர கடைசி மனிதனை பார்க்கும்போதும்;
பெற்ற
குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வசதியின்றி தவிக்கும் தந்தையின் அழுகையை கேட்கும்போதும்;
கல்வி
என்ற பெயரில் பல லட்சங்களை செலவு செய்த பிறகும், வாழ்வில் செய்வதரியாது தவிக்கும்
இளைஞர்களுடன் உரையாடும்போதும்;
நாம்
ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன்.
எதுவும்
செய்ய முடியவில்லை. அருகதை இல்லை. துணிவு இல்லை. முயற்சி இல்லை.
சரி..வரும் தேர்தலில் வாக்காவது அளிப்போம் என்று
மதுரைக்கு ரயில் முன்பதவி செய்திருக்கின்றேன்.

